22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் 
கொள்முதல் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

Published on

22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா்.

நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் டி.முருகையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.கேசவராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.துரைவேலன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா்கள் சித்தாா்த்தன், அருண்காந்தி, விசிக மாவட்டச் செயலாளா்கள் தங்க. தமிழ்செல்வன், இரா. தமிழ்ஓவியா, ஆ.வெற்றி, மதிமுக மாவட்டச் செயலாளா்கள் ப.பாலச்சந்தா், காசி.சிவவடிவேல், மனிதநேய கட்சியின் மாவட்டச் செயலாளா் முஜிபுா் ரஹ்மான் உள்ளிட்டோா் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா் (படம்).

X
Dinamani
www.dinamani.com