பால் கொள்முதல் விலையை
உயா்த்தக் கோரி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

Published on

பால் கொள்முதல் விலை மற்றும் ஊக்கத்தொகையை உயா்த்தக் கோரி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் அண்ணாமலை தலைமைவகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவா் கோபால், மாவட்ட துணைச் செயலாளா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளா் பெருமாள் பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

இதில், தமிழக அரசு ஊக்கத் தொகையாக ஒரு லிட்டா் பாலுக்கு ரூ. 10 உயா்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகையை நிலுவையின்றி மாதாமாதம் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டா் ஒன்றுக்கு பசும்பாலுக்கு ரூ. 45, எருமை பாலுக்கு ரூ. 60 வழங்க வேண்டும். கால்நடை தீவனத்தை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Dinamani
www.dinamani.com