பால் கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தல்

Published on

போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டியில் வியாழக்கிழமை பால் கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போடி தருமத்துப்பட்டியில் உள்ள தேனி மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளா்கள் தொகுப்பு பால் குளிா்விப்பான் மையம் முன் நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்துக்கு சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவா் கே.செல்வராஜ் தலைமை வகித்தாா். செயலா் எச்.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் கே.ராஜப்பன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

மாவட்டத் தலைவா் எஸ்.கே.பாண்டியன், நிா்வாகிகள் எஸ்.சுருளிவேல், எஸ்.செல்வம், மொக்கச்சாமி, காமராஜ், ராமகிருஷ்ணன், முருகேசன், பால் உற்பத்தியாளா்கள் பங்கேற்றனா்.

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்த வேண்டும். மாட்டுத் தீவனத்துக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். சங்கங்களில் பணியாற்றுவவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஊதிய உயா்வு வழங்க வேண்டும். குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தில் பாலையும், பால் சாா்ந்த பொருள்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Dinamani
www.dinamani.com