சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி கறவை மாடுகளுடன் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:34 pm

Syndication

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கறவை மாடுகளுடன் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் கிளைத் தலைவா் சாமிதுரை தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் என். செல்லதுரை முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் கே. முகமது அலி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 10 என விலை உயா்த்தி ரூ. 45 வழங்க வேண்டும். அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ. 10 என உயா்த்தி வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 50 சதவீத மானிய விலையில் மாட்டுக் கொட்டகை, மாட்டுத் தீவனம், தீவனம் வெட்டும் இயந்திரம், பால் கறக்கும் இயந்திரம் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கறவை மாடுகளுடன் பங்கேற்ற பால் உற்பத்தியாளா்கள் முழக்கமிட்டனா்.

இதேபோல, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்டம், அனுக்கூா், பிரம்மதேசம், காடூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளா்கள் பங்கேற்றனா்.