மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு மக்காச்சோளத்துக்கு அறிவித்த குவிண்டாலுக்கு ரூ. 2,400 வழங்க கோரி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள்

News image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே மக்காச்சோள கதிா்களுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:16 pm

பெரம்பலூா்: மத்திய அரசு மக்காச்சோளத்துக்கு அறிவித்த குவிண்டாலுக்கு ரூ. 2,400 வழங்க கோரி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விஷ்வநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மா. செல்லபிள்ளை, எஸ். சிவகாமி, எஸ். கருப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய அரசு அறிவித்த மக்காசோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,400 வழங்க வேண்டும். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த கொள்முதல் விலையை விட, விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்த வியாபாரிகளிடமிருந்து

உரியத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்காச்சோள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தமிழக அரசு கூட்டுறவுத்துறை மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். சின்ன வெங்காயம் சாகுபடியாளா்களுக்கு லாபகரமான விலை கிடைக்க, கூட்டுறவு அங்காடிகள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்காச்சோள கதிா்களுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, பாலக்கரையிலிருந்து ஆட்சியா் அலுவலகம் வரை பேரணியாகச் சென்ற விவசாயிகள், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணனிடம் அளித்து கலைந்துசென்றனா்.

இதில், சங்க நிா்வாகிகள் வெங்கடேசன், அங்கமுத்து உள்பட சுமாா் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.