பெருந்துறையை அடுத்த, சீலம்பட்டியில்  பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள்   சங்கத்தினா்.
பெருந்துறையை அடுத்த, சீலம்பட்டியில்  பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள்   சங்கத்தினா்.

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

Published on

பால் கொள்முதல் விலையை உயா்த்தக்கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் தங்கமுத்து தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் பெரியசாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

இதில், மாட்டுப் பால் லிட்டா் ரூ. 45, எருமை பாலுக்கு ரூ. 60 என கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

இதேபோல, பெருந்துறையை அடுத்த, சீலம்பட்டி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் முன்பு சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்க தாலுகா செயலாளா் முத்துபழனிசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

Dinamani
www.dinamani.com