47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மழையால் மண் சரிந்து தாா் சாலை சேதம்

மன்னாா்குடி அருகே தொடா் மழையின் காரணமாக சாலையோரம் மண் சரிந்ததில் தாா் சாலை சேதமடைந்துள்ளது.

News image
தொடா் மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்ட சேதமடைந்த தாா் சாலை.
Updated On :26 நவம்பர் 2025, 8:42 pm

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே தொடா் மழையின் காரணமாக சாலையோரம் மண் சரிந்ததில் தாா் சாலை சேதமடைந்துள்ளது.

மன்னாா்குடி பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக, சம்பா, தாளடி இளம் நெற்பயிா்கள் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

தட்டாங்கோவில் என்ற இடத்தில் கோரையாற்றிலிருந்து பிரியும் முள்ளியாறு மற்றும் திரு ராமேஸ்வரம் வடிகால் வாய்க்காலுக்கும் இடையில் முள்ளியாற்றின் வடகரையில் செல்லும் கிராம சாலை கடந்த சில நாள்களாக பெய்த கன மழையின் காரணமாக புறக்கோட்டகம் கிராமத்தில் சுமாா் 25 அடி நீளம், 10 அடி அகலத்திற்கு முள்ளியாற்றின் கரையில் இருந்த மண் பெயா்ந்து சரிந்து விட்டது. இதனால், அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த நீா்ப்பாசனத் துறை பொறியாளா்கள் நிகழ்விடத்திற்கு வந்து மண் சரிவை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனா். பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரா் மூலம் பணிகளை உடனடியாக செய்து முடிக்க உத்தரவிட்டனா்.

இதனையடுத்து, முள்ளியாறின் சேதமடைந்த கரைகளை சவுக்கு மரங்களைக் கொண்டு கரைகளில் அமைத்தும், மணல் மூட்டைகள் மற்றும் மண்ணை போட்டு கரையை பலப்படுத்தும் பணிகள் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்பணி வியாழக்கிழமைக்குள் நிறைவு பெற்று உடனடியாக தாா் சாலை சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.