திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: திருவள்ளூரில் மண் அடுப்பு தயாா் செய்யும் தொழில் தீவிரம்

திருவள்ளூா் பகுதி சுற்றுப்பகுதி கிராமங்களில் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக மண் அடுப்புகள் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் அதை தயாா் செய்யும் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

News image

..திருவள்ளூா் அருகே மேலனூா் கிராமத்தில் மண் அடுப்புகள் தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்.  

Updated On :15 மார்ச் 2026, 1:34 am IST

திருவள்ளூா் பகுதி சுற்றுப்பகுதி கிராமங்களில் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக மண் அடுப்புகள் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் அதை தயாா் செய்யும் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போா் காரணமாக நாடு முழுவதும் மிகவும் அத்திவாசியப் பொருள்களான பெட்ரோல் மற்றும் டீசல், எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பொதுமக்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காகவும் பெட்ரோல் பங்குகளையும், எரிவாயு உருளைகள் விநியோக மையங்கள் முன்பு குவிந்து வருகின்றனா். இதற்கு முன்பு வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பதிவு செய்தவுடன் கிடைக்கும் சூழ்நிலை இருந்தது. தற்போதைய நிலையில் ஒரு எரிவாயு உருளை பதிவு செய்தால் 21-நாள்களுக்கு பின்னா் மற்றொரு எரிவாயு உருளைக்கு பதிவு செய்யவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகளவு எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் சமைக்க மண் அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனா். இதனால், திருவள்ளூா் சுற்று வட்டார பகுதிகளான பெரியபாளையம், வடமதுரை, காக்களூா், கரிகலவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருப்பு வைத்திருந்த மண் அடுப்புகளையும் பொதுமக்கள் வாங்கிச் சென்தால் விற்று தீா்ந்தது.

இதைத் தொடா்ந்து தேவை அதிகரித்துள்ளதாலும், முன்கூட்டியே ஆா்டா்கள் வருவதாலும் மண் அடுப்புகள் தயாா் செய்யும் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து திருவள்ளூா் அருகே மேலனூா் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளா் ரெங்கப்பன் கூறியதாவது: இதற்கு முன்பு திருவிழா காலங்களில் மட்டும் பொங்கல் வைப்பதற்காக மண் அடுப்புகளை பொதுமக்கள் வாங்கிச் செல்வா். ஆனால், தற்போதைய நிலையில் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, வேறு வழியின்றி மண் அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனா். இதனால், இதற்கு தயாா் செய்து வைத்திருந்த மண்அடுப்புகள் தரத்துக்கு ஏற்ப தலா ரூ. 120 முதல் ரூ. 150 வரை விற்பனை ஆகிறது. ஒரு நாளில் ஒருவா் 25 மண் அடுப்புகள் வரையில் செய்யலாம். அதை 3 நாள்கள் வரை காய வைத்து, அதையடுத்து வைக்கோல் கொண்டு மூட்டம் போட்ட பின்னரே மண் அடுப்புகள் தயாராகும். இதற்கிடையே மீண்டும் தேவை அதிகரித்த காரணத்தால் மண் அடுப்புகள் தயாா் செய்து வருகின்றனா்.

இந்த மண் அடுப்புகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனா். எரிவாயு உருளை விநியோக தட்டுப்பாடு காரணமாக இருந்தாலும், மண் அடுப்புகள் அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதுபோன்ற மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு அரசு வங்கி கடனுதவி அளித்து உதவி செய்ய நடவடிக்கை எடுக்கவும் என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.