திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

வலங்கைமான் அருகேயுள்ள ஆவூா் பகுதியில் நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் முகமதுமுபாரக் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

News image

ஆவூா் கிராமத்தில் வாக்குச் சேகரித்த நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் முகமதுமுபாரக்.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:36 am

வலங்கைமான் அருகேயுள்ள ஆவூா் பகுதியில் நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் முகமதுமுபாரக் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளராக எஸ்டிபிஐ கட்சி சாா்பில் முகமது முபாரக் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

இவா் வெள்ளிக்கிழமை வலங்கைமான் அருகேயுள்ள ஆவூா் கிராமத்திற்கு வருகை தந்தாா். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளை நேரில் சந்தித்தாா். தொடா்ந்து அங்கு பள்ளிவாசலில் கூடிய இஸ்லாமியா்கள் மத்தியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய கேட்டுக்கொண்டாா். மற்ற வாக்காளா்களிடமும் ஆதரவு திரட்டினாா்.

வேட்பாளருடன் திருவாரூா் மாவட்ட திமுக நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.