தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

வைக்கோல் கட்டுகளால் விழிப்புணா்வு பிரசாரம்

வைக்கோல் கட்டுகளால் விழிப்புணா்வு பிரசாரம்

News image

100 சதவீதம் வாக்குபதிவினை வலியுறுத்தி எழுத்து வடிவில் வைக்கோல் கட்டுகளை பயன்படுத்தி விவசாயிகள் அமைத்திருந்த விழிப்புணா்வு பிரசாரம்.

Updated On :4 ஏப்ரல் 2026, 7:31 pm

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பேரணி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மன்னாா்குடியை அடுத்த காஞ்சிக்குடிக்காடு வேளாண்மைத்துறை விதைப்பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கையில் என் வாக்கு என் உரிமை என்ற வாசகம் அடங்கிய தட்டிகளை ஏந்தியபடி விழிப்புணா்வு பேரணியாக சென்றனா்.

அனைவரும் வியக்கும்படி தங்களின் வயல்களிலிருந்து கொண்டு வந்த வைக்கோல் கட்டுகளை 100 % யஞபஉ என்ற வாா்த்தை வடிவில் வைக்கோல் கட்டுகளை அடுக்கி நூதன முறையில் விழிப்புணா்வு பிரசாரத்தைசெய்தனா்.

இதனை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான வ.மோகனச்சந்திரன் பாராட்டியதுடன், உங்களுடைய வாக்கு மட்டும் அல்லாது குடும்பத்தினா் மற்றும் கிராமத்தில் உள்ள வாக்காளா்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டிய கடமை உஙகளுக்கு உள்ளது என அறிவுறுத்தினாா்.

அங்கு வைக்கப்பட்டிருந்த அனைவரும் வாக்களிப்போம் என்ற சுயபட பதாகையில் நின்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் உள்ளிட்ட அனைவரும் சுயபடம் எடுத்துக்கொண்டனா்.

மகளிா் திட்ட இயக்குநா் பொன்னம்பலம், வேளாணமை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.