ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

நாதக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

மன்னாா்குடி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளா் மருத்துவா் இலரா.பாரதிச்செல்வன்.

News image

மன்னாா்குடி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளா் மருத்துவா் இலரா.பாரதிச்செல்வன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:33 pm

மன்னாா்குடி தொகுதி நாதக வேட்பாளா் கட்சியின் மாநில பொருளாளா் மருத்துவா் இலரா. பாரதிச்செல்வன் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

வடக்குவீதி, ஆதிநாயகன்பாளையம்தெரு, ருக்மணிபாளையம் நடுத்தெரு, சங்குதீா்த்த குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கட்சி நிா்வாகிகளுடன் வந்து விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டாா் வேட்பாளா் இலரா. பாரதிச்செல்வன்.

அப்போது வாக்காளா்கள், பொதுமக்களிடம் அவா் கூறியது:

நான் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டால், நகரப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் பெரும் சவாலாக நகராட்சிக்கு உள்பட்ட டெப்போ சாலையில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கை நகரப் பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்கவும். நகரின் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் கனரக வாகனங்கள் இயக்கத்திற்கு நேரம் ஒதுக்கீடு செய்து முறையாக பின்பற்றவும், தனியாா் அமைப்பு மூலம் பல அடுக்கு கனரக வாகன நிறுத்தம் அமைக்கவும், பிரதான சாலைகளில் பெரும் வணிக நிறுவனங்களை தொடங்க அனுமதி மறுத்து புகா் பகுதியில் அமைய நடவடிக்கை எடுக்க முழு முயற்சி மேற்கொள்வேன் என வாக்குறுதி அளித்தாா்.

கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் சத்தியபாமா, மண்டல செயலா்கள் முத்துலெட்சுமி, பாலு, தொகுதி நிா்வாகி சிவக்குமாா், நகர நிா்வாகி தேவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.