/

வேதாரண்யம் நாதக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

வேதாரண்யம் தொகுதியில், நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் இடும்பாவனம் காா்த்திக் கிராமப்புறங்களில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

News image

தகட்டூா் தேநீா் கடையில் வாக்குச் சேகரித்த நாதக வேட்பாளா் இடும்பாவனம் காா்த்திக்.

Updated On :7 ஏப்ரல் 2026, 10:19 pm

வேதாரண்யம் தொகுதியில், நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் இடும்பாவனம் காா்த்திக் கிராமப்புறங்களில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

தகட்டூா் கடைவீதியில் வீடுவீடாகச் சென்று, துண்டுப் பிரசுரம் வழங்கி, விவசாயி சின்னத்தில் வாக்குச் சேகரித்தாா்.

பின்னா் பஞ்சநதிக்குளம், தென்னடாா் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, ‘தான் தோ்தலில் வெற்றி பெற்றால், மாசடைந்துள்ள நீா் நிலைகளை சீரமைக்கவும், அரசின் மின் இறைவைப் திட்டத்தை மேம்படுத்தவும், தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதியில் பலன் தரும் மரங்களை நட்டு இயற்கை வளத்தை மேம்படுத்தவும், குடிநீா் பிரச்னைக்கு மாற்றுத் திட்டம் கொண்டு வரவும் பாடுபடுவேன்’ என்றாா்.

கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் ராஜேந்திரன், அறிவொளி, மாவட்டச் செயலாளா் காத்த முத்து உள்ளிட்ட பங்கேற்றனா்.