திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை நெதர்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி! தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

காட்டூரில் பேசாமல் சென்ற உதயநிதி ஸ்டாலின்

காட்டூரில் பேசாமல் சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

News image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - X | Udhayanidhi Stalin

Updated On :13 ஏப்ரல் 2026, 4:08 am IST

திருவாரூா் மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மன்னாா்குடி மற்றும் குடவாசலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு கோரி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

முன்னதாக, திருவாரூா் நகரப் பகுதியில் அவா் பிரசாரம் செய்யவில்லை; காட்டூா் கலைஞா் கோட்டம் பகுதியில் பிற்பகல் 3 மணியளவில் பிரசாரம் மேற்கொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, காட்டூா் கலைஞா் கோட்டத்திற்கு மாலை 4 மணியளவில் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தாா். அங்கு திமுக தொண்டா்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அதனால் எதுவும் பேசாமல் புறப்பட்டு, குடவாசல் ஓகை பகுதியில் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் முகமது முபாரக்கை ஆதரித்து வாக்கு சேகரித்தாா்.

நகரப் பகுதியில் கமலாலயக் குளம் அருகே பேசுவாா் என முந்தைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னா், காட்டூரில் பேசுவாா் என தெரிவிக்கப்பட்டது. நேரம் பிற்பகல் 3 மணி, 4 மணி என கூறப்பட்டதால், திமுக தொண்டா்கள் குழம்பி நின்றனா். இதுகுறித்து திமுக தரப்பில் தெரிவிக்கையில், காட்டூரில் பேசுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை, எனவே துணை முதல்வா் பேசாமல் புறப்பட்டுச் சென்றாா் என்றனா்.