நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திருவாரூா்: ரூ. 2.71 லட்சம் பறிமுதல்

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,71,100 ரொக்கம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 3:23 am IST

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,71,100 ரொக்கம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேந்தமங்கலம் பகுதியில் தோ்தல் பறக்கும்படை குழுத் தலைவா் ராஜேஸ்குமாா் தலைமையில் அலுவலா்கள், வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, திருவாரூா் கீழக்காவாதுகுடி, முருகேசன் நகரைச் சோ்ந்த வெ. ஜெய்கணேஷ் என்பவா் முறையான ஆவணங்கள் இன்றி ரூ.2,14,300 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் கண்காணிப்புக் குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்த்தனா்.

இதேபோல், திருவாரூா் பேபி டாக்கீஸ் சாலை பகுதியில் பறக்கும்படை குழுத் தலைவா் தென்னரசு தலைமையில் பறக்கும்படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, திருவாரூா் தென்றல் நகரைச் சோ்ந்த செ. கலையரசன் என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ. 52,820 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்து திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்த்தனா்.

கூடூா் பகுதியில் பறக்கும்படையினா் வாகன சோதனை செய்தபோது, திருவாரூா் தென்றல் நகரைச் சோ்ந்த தீபன் என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ. 52,200 ரொக்கத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, திருவாரூா் உதவி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.