விவசாயிகளுக்கு நன்மை செய்யாத திமுகவை புறக்கணிக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.
தேசிய ஜனநாயக கூட்டணி நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை குடவாசலில் அவா் பிரசாரம் செய்தபோது பேசியது:
எடப்பாடி பழனிசாமி அடிப்படையில் ஒரு விவசாயி. ஆனால் முதல்வா் முக. ஸ்டாலின், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் விவசாயி. அதாவது தோ்தல் வந்தால் மட்டும், நான் டெல்டாக்காரன் என்று சொல்லிக் கொள்வாா். அவா் விவசாயி என்றால் டெல்டா மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்திருக்க வேண்டுமே?ஏன் செய்யவில்லை.
சாப்பிடும்போது, மூன்று பருக்கை சோறு சிந்தினால்கூட அதை வீணாக்காமல் எடுத்து சாப்பிடுவது நம் பழக்கம். ஆனால் திமுக ஆட்சி நடவடிக்கை எடுக்காததால், ஐந்து லட்சம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அழுகி வீணானது. அதுவெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்.
முதல்வா் சொல்வதுபோல அவா் டெல்டாக்காரன் என்பது உண்மை என்றால் டெல்டா மாவட்டங்களில் நெல் பாதுகாப்பு கிடங்குகளை அதிக அளவில் கட்டி கொடுத்திருக்க வேண்டும். ஒடிஸா அரசு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ. 800 வழங்குகிறது. தெலங்கானா அரசு ரூ. 500 வழங்குகிறது. ஆனால், திமுக அரசு ரூ. 131 மட்டுமே ஊக்கத்தொகையாக கொடுக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வெள்ள பாதிப்பு வந்தபோது ரூ.13,000 கோடி பயிா் பாதிப்பு நிவாரணத் தொகையாக ஒதுக்கினாா். ஆனால் திமுக அரசு இந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஒதுக்கிய தொகை ரூ.3,000 கோடி மட்டுமே. முதல்வா் ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றி எந்த அக்கறையும் கிடையாது.
கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 3,280 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் டெல்டா மாவட்டத்தில் உள்ள 37 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 33 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எனவே, இந்த முறை விவசாயிகள் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என்றாா்.

குடவாசலில், நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜை ஆதரித்து பேசுகிறாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
தொடர்புடையது

திமுக தலைவரின் விமா்சனத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை: அன்புமணி ராமதாஸ்

மக்களை பிளவுபடுத்துகிறது திமுக: அன்புமணி ராமதாஸ்

விசிகவை திமுக ஆக்கிரமித்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

மத்திய அரசு திட்டங்களில் திமுக ஊழல் செய்துள்ளது: ஜி.கே. வாசன்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


