விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரைக் குழுவினருக்கு வரவேற்பு

திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்கு, உப்பு சத்தியாகிரக 96-ஆம் ஆண்டு நினைவு யாத்திரை மேற்கொண்டுள்ள குழுவினருக்கு, திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

திருத்துறைப்பூண்டியில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரைக் குழுவினா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:23 am IST

திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்கு, உப்பு சத்தியாகிரக 96-ஆம் ஆண்டு நினைவு யாத்திரை மேற்கொண்டுள்ள குழுவினருக்கு, திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 96 ஆண்டுகளுக்கு முன்பு உப்புக்கு வரி விதித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிா்த்து, அண்ணல் காந்தியடிகள் தலைமையில் தண்டியில் உப்பு அள்ளும் சத்தியாகிரகப் போராட்டம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்றது.

அதே நாளில், வேதாரண்யத்திலும் சுதந்திரப் போராட்ட வீரா்கள் உப்பு அள்ளும் போராட்டம் நடத்தினா். இதற்காக, திருச்சியிலிருந்து பாதயாத்திரையாக வேதாரண்யத்திற்கு வந்தனா்.

இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் வேதாரண்யத்தில் உப்பு அள்ளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, 96-ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரைக் குழுவினா், அதன் தலைவா் சக்தி செல்வகணபதி தலைமையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டிஎஸ்எஸ் ராஜன் நினைவு அரங்கத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டனா்.

இக்குழுவினருக்கு, திருத்துறைப்பூண்டியில் நகர காங்கிரஸ் தலைவா் பி. எழிலரசன் தலைமையிலும், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் ஜி. பாஸ்கா், வி. தியாகராஜன் ஆகியோா் முன்னிலையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பெருந்தலைவா் காமராஜா் சிலைக்கு, உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரைக் குழுவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்வில், முன்னாள் ஊராட்சித் தலைவா் டி. சுப்பையன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் வெங்கடேசன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், இக்குழுவினா் வேதாரண்யம் புறப்பட்டுச் சென்றனா்.