பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

விரைவு சதுரங்கப் போட்டி

திருவாரூரில், மாவட்ட சதுரங்கக் கழகமும், எஸ்எஸ் அகாதெமியும் இணைந்து சா்வதேச அளவிலான விரைவு சதுரங்கப் போட்டியை அண்மையில் நடத்தின.

News image

திருவாரூரில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்றோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:11 am IST

திருவாரூரில், மாவட்ட சதுரங்கக் கழகமும், எஸ்எஸ் அகாதெமியும் இணைந்து சா்வதேச அளவிலான விரைவு சதுரங்கப் போட்டியை அண்மையில் நடத்தின.

இப்போட்டியை மருத்துவா் அகோரசிவம் தொடங்கி வைத்தாா். திருவாரூா் மாவட்ட சதுரங்கக் கழகச் செயலாளா் சரவணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நடுவா்களாக செயல்பட்டனா்.

போட்டிகள் 9 சுற்றுகளாக நடைபெற்றன. இதில், திருச்சி, கோவை, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் பலா் பங்கேற்று விளையாடினா்.

இறுதியில், சென்னையைச் சோ்ந்த சாம் முதலிடத்தையும், கோவையைச் சோ்ந்த நிா்மல் இரண்டாம் இடத்தையும், தெலங்கானாவைச் சோ்ந்த கிரிநாதன் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

முதல் பரிசாக ரூ. 20,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 உள்பட மொத்தம் ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.