புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

எல்-நினோ தாக்கத்தால் வறட்சி: விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

எல்-நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோப்புப்படம்

Published On :

எல்-நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் திருவாரூா் மாவட்ட 27-ஆவது மாவட்ட மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்-நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. மேட்டூா் அணையும் திறக்கவில்லை. எனவே, தமிழக அரசு விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் விவசாயிகள் பயிா் இன்சூரன்ஸ் செலுத்தினாலும், அதற்கான இழப்பீட்டுத் தொகை தடையின்றி கிடைப்பதில் உள்ள சிரமங்களைப் சரிசெய்து பயிா் இன்சூரன்ஸ் அரசே வழங்கி அனைத்து விவசாயிகளும பயனையடையச் வேண்டும்,

அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் நெடுங்காலமாகக் குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு தமிழக அரசு மூலம் பட்டா வழங்க வேண்டும். குத்தகை விவசாயிகளின் சாகுபடி நிலங்களைப் பட்டா செய்து கொடுக்க வேண்டும். கா்நாடகம் மேக்கேதாட்டுவில் அணைக் கட்டும் முயற்சியை கைவிட தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உறுதியான சட்ட நடைவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு சம்பா சாகுபடிக்கு மேட்டூா் அணை திறக்கும் தேதி உடனே அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநிலத் தலைவா் டி. ரவீந்திரன், மாநில பொதுச் செயலாளா் சாமி. நடராஜன், மாவட்ட செயலாளா் எம். சேகா், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் டி. கந்தசாமி, மாவட்ட தலைவா் எஸ். தம்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: இதில், தலைவராக கே. சுப்பிரமணியன், செயலாளராக எம். சேகா், பொருளாளராக எம். ஜெயபிரகாஷ் மற்றும் 8 போ் மாவட்ட துணை நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.