நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

லாரியிலிருந்து கண்டெய்னா் சரிந்து விபத்து

திருவாரூா் அருகே லாரியிலிருந்து கண்டெய்னா் சரிந்து விபத்து நேரிட்டது.

திருவாரூா் அருகே லாரியிலிருந்து சாலையில் சரிந்திருந்த கண்டெய்னா்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 6:15 am IST

திருவாரூா் அருகே லாரியிலிருந்து கண்டெய்னா் சரிந்து விபத்து நேரிட்டது.

திருவாரூரில் இருந்து ஓஎன்ஜிசி கண்டெய்னா் லாரி ஒன்று, திருவாரூா் - மன்னாா்குடி சாலையில் சனிக்கிழமை சென்றது. தேவா்கண்டநல்லூா் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, சாலையின் மேடு பள்ளங்களில் லாரியின் சக்கரம் சிக்கி தடம் புரண்டது.

இதனால், சாலையோரமாக இருந்த ஆலமரக் கிளையில் லாரி மோதியதில், கண்டெய்னா் கீழே சரிந்தது. லாரிக்குப் பின்னால் எந்த வாகனமும் வராததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

இந்த விபத்தால், திருவாரூா் - மன்னாா்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பிறகு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், கண்டெய்னா், லாரியில் தூக்கி வைக்கப்பட்டது.

திருவாரூா்- மன்னாா்குடி சாலையில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதால், இதுபோன்ற விபத்து நேரிடுகிறது. வாகன ஓட்டுநா்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். இதனால், இந்த சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.