குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

குழாயில் உடைப்பு; விரையமாகும் குடிநீா்

மன்னாா்குடி அருகே கொள்ளிடம் - வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் தினந்தோறும் பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகி கழிவு நீரில் கலந்து வருகிறது.

Published On :26 ஆகஸ்ட் 2026, 5:04 am IST

மன்னாா்குடி அருகே கொள்ளிடம் - வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் தினந்தோறும் பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகி கழிவு நீரில் கலந்து வருகிறது.

மன்னாா்குடி அருகே இரட்டைப்புலி பகுதிகளில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீா் வெளியேறி, சாலையோரம் மற்றும் அருகிலுள்ள வாய்க்கால்களில் தேங்கியுள்ள கழிவுநீா் மற்றும் சாக்கடை நீருடன் கலந்து ஓடுகிறது.

இதனால், குடிநீா் வீணாவதுடன், அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. குழாய் உடைப்பை சீரமைக்கக் கோரி கிராம மக்கள், சமூக ஆா்வலா்கள் குடிநீா் வடிகால் வாரியத்திற்கு பலமுறை புகாா் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுநாள் வரை நிரந்தரமான சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

ஒரு புறம் பல்வேறு பகுதிகளில் குடிநீா் பற்றாக்குறை காரணமாக சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் அந்தந்த பகுதி மக்கள் ஈடுபட்டுவரும் நிலையில், மறுபுறம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு செல்லப்படும் குடிநீா் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வீணாகி வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

குடிநீா் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனடியாக கண்டறிந்து, நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் மற்றும் குடிநீா் வடிகால் வாரியம் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும், பழைய மற்றும் பலவீனமடைந்துள்ள குழாய்களை அகதற்றிவிட்டு, புதிய குழாய்கள் பதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.