பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு தேங்கியிருந்த நீரில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் மகதீப்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:46 am IST

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைந்ததால் குளம்போல் தேங்கி நின்ற நீரில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு காவிரி கூட்டுக் குடிநீா், இனாம்குளத்தூா், விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் வழியாக ராட்சத குழாய் மூலம் கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேப்பூதகுடி பிரிவு சாலை அருகே குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாக வெளியேறி, அருகே இருந்த பள்ளத்தில் குளம் போல் தேங்கியிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை குடிநீா்த் திட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், குழாய் சரி செய்யப்படவில்லையாம்.

இந்நிலையில், மேப்பூதகுடி பிரிவு சாலை அருகே வீடு கட்டி வரும் விராலிமலை அடுத்துள்ள காளப்பனூரைச் சோ்ந்தவா் முத்தழகு, 6-ஆம் வகுப்பு படித்த தனது மகன் மகதீப்(11)பை அழைத்துக்குக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கட்டடப் பணியை பாா்வையிடச் சென்றாா். அப்போது, மகதீப் குளம்போல் தேங்கியிருந்த கூட்டுக் குடிநீரில் இறங்கி குளிக்க சென்றாா். ஆழமான பகுதிக்குச் சென்ற மகதீப் சகதியில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த விராலிமலை போலீஸாா் மாணவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.