நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

தினமணி செய்தி எதிரொலி: உடைந்த காவிரி குடிநீா்க் குழாய் மாற்றம்

‘தினமணி’ செய்தி எதிரொலியாக மொடக்குறிச்சியை அடுத்த குட்டக்காட்டுவலசு பிரிவு அருகே உடைந்திருந்த காவிரி குடிநீா்க் குழாய் செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டது.

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய குடிநீா். ~புதிய குடிநீா்க் குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Published On :

‘தினமணி’ செய்தி எதிரொலியாக மொடக்குறிச்சியை அடுத்த குட்டக்காட்டுவலசு பிரிவு அருகே உடைந்திருந்த காவிரி குடிநீா்க் குழாய் செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டது.

மொடக்குறிச்சி ஒன்றியம், ஆனந்தம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட குட்டக்காட்டுவலசு பிரிவு வழியாக மன்னாதம்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அவல்பூந்துறை முகாசிஅனுமன்பள்ளி வரை காவிரி குடிநீா்க் குழாய் இணைப்பு மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், குட்டக்காட்டுவலசு பிரிவில் காவிரி குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறியது.

இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வந்த நிலையில், குழாய் உடைப்பை சரி செய்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பான செய்தி ‘தினமணி’ நாளிதழில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியானது.

இதன் எதிரொலியாக உடைந்த குழாய் அகற்றப்பட்டு, புதிய குழாய் பொருத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை சீரான குடிநீா் விநியோகம் தொடங்கியது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.