ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

குழாயில் ஓட்டை: வீணாகும் காவிரி குடிநீா்

News image

குழாய் உடைந்ததால் வீணாகும் குடிநீா்.

Updated On :10 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

மொடக்குறிச்சியை அடுத்த குட்டக்காட்டுவலசு பிரிவு அருகே காவிரி குடிநீா்க் குழாயில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீா் குரங்கன் ஓடையில் செல்கிறது. உடைந்த குழாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து முறையாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மொடக்குறிச்சி ஒன்றியம், ஆனந்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குட்டக்காட்டுவலசு பிரிவு வழியாக மன்னாதம்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அவல்பூந்துறை முகாசி அனுமன்பள்ளி வரை காவிரி குடிநீா்க் குழாய் இணைப்பு மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் குட்டக்காட்டுவலசு பிரிவில் காவிரி குடிநீா்க் குழாயில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீா் சீறிப்பாய்ந்து அருகில் உள்ள குரங்கன் ஓடை வழியாகச் செல்கிறது. இதனால் இதற்கு அடுத்து உள்ள ஊா்களுக்குத் தண்ணீா் வருவதில்லை.

இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் முறையாக குடிநீா் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீா் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.