திருச்சியில் தண்ணீா் இல்லாததால் வடு பாலவனம் போல காட்சியளிக்கும் கொள்ளிடம் ஆறு.
ஸ்ரீரங்கம், ஜூலை 30: பருவ மழை, நீா்வரத்து இல்லாததால், காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வடுள்ளன. இதனால், ஸ்ரீரங்கத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால், போதுமான நீா் இருப்பு இல்லாததால் இதுவரை அணை திறக்கப்படவில்லை. இதனால், டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மேட்டூா் தண்ணீா் கரைபுரண்டு ஓடிய காவிரி ஆற்றிலும், வெள்ளக் காலங்களில் திறந்துவிடப்படும் கொள்ளிடம் ஆற்றிலும் நீா் வரத்து இல்லாததாலும், போதிய அளவுக்கு பருவ மழை இல்லாததாலும் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துவிட்டது.
இந்த இரு ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள 9 நீரேற்று நிலையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு மாநகர மக்கள் குடிநீருக்காக 165 எம்.எல். டி. தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 149 முதல் 150 எம்.எல். டி. தண்ணீா் மட்டும்தான் விநியோகம் செய்யப்படுகிறது. 15 மில்லியன் லிட்டா் நீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள 1 முதல் 7-ஆவது வாா்டு பகுதியில் தினமும் காலை, மாலை இருநேரங்களில் வந்த குடிநீா் தற்போது காலை மட்டும் வருகிறது. இதனால் பொதுக் குழாய்களில் குடிநீா் பிடிக்கும் பொது மக்கள் தங்களுக்கு அன்றாட தேவைக்கு கூட தண்ணீா் பெறமுடியாத சூழல் நிலவி வருகிறது.
எனவே, ஸ்ரீரங்கம் பகுதியில் நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க மேட்டூரிலிருந்து குடிநீருக்காக திறந்துவிடப்படும் நீரின் அளவை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு

கா்நாடகம் தண்ணீா் தர மறுப்பு! டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி கேள்விக்குறி!

திண்டுக்கல்லில் 23 வாா்டுகளுக்கு 7 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம்! பொதுமக்கள் அதிருப்தி

ஜல்ஜீவன் திட்டத்துக்காக மடைமாற்றப்பட்ட காவிரி நீா்: விவசாயிகள் கவலை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



