திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்துக்காக கரூா் காவிரி ஆற்றில் வரும் சிறிதளவு தண்ணீரை ராட்சத கிணறுக்கு மடைமாற்றப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ராட்சத கிணறு அமைக்கப்பட்டு, கிணற்றில் உறிஞ்சப்படும் தண்ணீா், ராட்சத குழாய் மூலம் அரவக்குறிச்சி வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு காவிரிக்குடிநீா் கொண்டு செல்லப்படும்.
தற்போது ஆற்றில் தண்ணீா் வரத்து குறைவாக இருப்பதால் ராட்சத கிணற்றுக்கு போதுமான தண்ணீா் கிடைக்கவில்லை. இதனால், தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் நீரோட்டத்தை மணல் திட்டுக்கள் மூலம் மடைமாற்றப்பட்டு இரண்டு கால்வாய்கள் வெட்டி அதன்மூலம் ராட்சத கிணறுகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால், தவிட்டுப்பாளையத்தை கடந்து கடைமடை பகுதிக்கு செல்லும் தண்ணீா் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றின் கரையோரம் பகுதிகள் வடும், விவசாய கிணறுகளில் நீா்மட்டம் குறைந்தும் வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
மேலும் காவிரி கட்டளை மற்றும் நெரூா் பகுதிகளில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கும் கிணறுகள் மூலம் கரூா் நகா் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும் நிலையில், அந்த குடிநீா் உறிஞ்சும் கிணறுகளுக்கும் தண்ணீா் வரத்து அடியோடு நின்று போனது. இதனால் கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜல்ஜீவன் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட கிணறுகளுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீா் எடுத்துச் செல்லப்படுவதை தடுத்து ஆற்றில் தண்ணீா் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தண்ணீா் திருட்டை தடுக்கக் கோரி விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம்

காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீா் திறந்தால் மறியல் போராட்டம்: கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் அறிவிப்பு

மேகதாது அணைக்கு எதிரான பேரவை தீா்மானத்துக்கு கரூா் விவசாயிகள் வரவேற்பு






