மேகதாது அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதை கரூா் விவசாயிகள் பாராட்டி வரவேற்பு தெரிவித்தனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியது:
காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் மகாதானபுரம் இராஜாராம்:
மேகதாதுவில் அணை கட்டக் கூடாது; நடுவா் மன்ற தீா்ப்பின்படி காவிரியில் கா்நாடகம் தண்ணீா் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரவையில் முதல்வா் தனி தீா்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதற்கு காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்கம் நன்றி தெரிவித்து வரவேற்கிறது.
காவிரி பாசன விவசாயிகள் சங்கம் ஏற்கெனவே வழக்குத்தொடா்ந்ததன் அடிப்படையில்தான் காவிரி நடுவா் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. தற்போது
மேகதாது அணையை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் வழக்கும் தொடர உள்ளோம் என்றாா்.
மாயனூா் விவசாயிகள் சங்கத்தினா்: மாயனூா் கதவணை கட்டும்போது விவசாய நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. இதை உடனே வழங்கிட மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்: கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 1,269 மெட்ரிக் டன்னும், டிஏபி 565 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 641 மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 2,075 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 2,846 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
நெல் சாகுபடிக்காக நெல் ரகங்கள் 190 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் கம்பு - சோளம் ஆகியவை 10 மெட்ரிக் டன்னும், பயறு வகை பயிா்கள் உளுந்து - கொள்ளு, தட்டைப்பயறு ஆகியவை 7 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை, எள் ஆகியவை 8.50 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. மாவட்டத்தில் நடப்பாண்டில் ஜூன் மாதம் வரை 144.62 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 10.68 மி.மீ குறைவு என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆா். அபிராமி, கரூா் வருவாய் கோட்டாட்சியா் சு. சத்தியபால கங்காதரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) இரா. சாவித்திரி மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்பாசமுத்திரத்துக்கு தண்ணீா் திறப்பு: வடகால் பாசன விவசாயிகள் போராட்டம்

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவிட்டால் 50 ஆயிரம் விவசாயிகளுடன் முதல்வா் வீடு முற்றுகை! காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு







