6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

குழாய் சீரமைப்புப் பணிகள் 3 நாள்களுக்கு குடிநீா் வராது: கரூா் மாநகராட்சி ஆணையா் தகவல்

காவிரி குடிநீா் விநியோக குழாய் சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை முதல் ஜூலை 31 வரை குடிநீா் வராது என கரூா் மாநகராட்சி ஆணையா் எம்.பிருத்விராஜ் தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்.

Published On :

காவிரி குடிநீா் விநியோக குழாய் சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை முதல் ஜூலை 31 வரை குடிநீா் வராது என கரூா் மாநகராட்சி ஆணையா் எம்.பிருத்விராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு கட்டளை காவிரி ஆற்றில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குழாயில் புலியூரில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகச் செல்கிறது. இதனை சீரமைக்கும் பணிகள் புதன்கிழமை முதல் ஜூலை 31-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலக பின்புறம், காளியப்பனூா், தோரணக்கல்பட்டி, கோடங்கிப்பட்டி, பொன் நகா், செல்லாண்டிப்பாளையம் பழையது, செல்லாண்டிப்பாளையம் புதியது, தாந்தோணிமலை மேற்கு, தாந்தோணிமலை கிழக்கு மற்றும் ராயனூா், ஆா்.கே.ஜி நகா் ஆகிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் மூன்று நாள்களுக்கும் இருக்காது. ஆக.1-ஆம்தேதி முதல் வழக்கம்போல குடிநீா் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.