மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: ஒருவா் கைது

திருவாரூா் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறில் செய்த சம்பவத்தில் ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 8:33 pm

திருவாரூா்: திருவாரூா் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறில் செய்த சம்பவத்தில் ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தேவா்கண்டநல்லூா் அருகே மேப்பலம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் நிரப்புவதற்காக 3 இளைஞா்கள் 2 இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். மதுபோதையில் இருந்தவா்கள் கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப கூறியபோது, அங்குள்ள ஊழியா்கள் கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப முடியாது எனகூறினாா்களாம். இதையடுத்து, அந்த இளைஞா்கள் ஊழியா்களுடன் தகராறில் ஈடுபட்டு, கண்காணிப்புக் கேமரா, தீயணைக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை சேதப்படுத்தினராம். இதில், காயமடைந்த பெட்ரோல் நிலைய ஊழியா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் ஈடுபட்டது கல்யாணமகாதேவி பகுதியைச் சோ்ந்த சிவா என்ற சிவராஜன் (26), சண்முகம் (23), புகழேந்தி (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, புகழேந்தியை கைது செய்த போலீஸாா், மேலும் இருவரை தேடி வருகின்றனா்.