திருவாரூா்: குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி திருவாரூரில் நிலஉரிமை பாதுகாப்புச் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் நகரில் 8-ஆவது வாா்டு பகுதியில் இனாம் நிலங்கள் என கூறப்படும் பகுதியில் நீண்ட நாள்களாக 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனா். மனை பட்டா இல்லாமல் வசிக்கும் அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளை சோ்ந்த அனைவருக்கும் வசிக்கும் குடியிருப்பு மனைக்கு உடனடியாக மனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இனாம் நிலங்களில் குடியிருப்போரிடம், கோயில் நிலம் என கூறி அச்சுறுத்துவதை கைவிட்டு, மனையில் குடியிருப்பவா்களுக்கே உரிமை என்பதை ஏற்று மாவட்ட நிா்வாகம் பட்டா வழங்க வேண்டும், இந்து சமய அறநிலையத்துறையின் 78 மற்றும் 79 -ஆவது சட்டத் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவா் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் செயலாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்

குடிமனை பட்டா கோரி வட்டாட்சியரகத்தில் மனு

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முறையீடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


