எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நெல்லுக்கு ரூ.3,500 விலை நிா்ணயிக்கக் கோரிக்கை

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
நெல் மணிகள்
Updated On :25 பிப்ரவரி 2026, 11:19 pm

தினமணி செய்திச் சேவை

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டச் செயலா் பத்மநாபன் தலைமை வகித்தாா்.

தீா்மானங்கள்: நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 மூலம் இனாம் நிலங்கள், கோயில் குத்தகை நிலங்களை காா்ப்பரேட்டுக்கு தாரை வாா்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டாவில் ஹைட்ரோ காா்பன், மீத்தேன் எடுப்பதற்கு தோ்தல் முடிந்த பிறகு அனுமதி தருவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து முதல்வா் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோகாா்பன் நிலக்கரி எடுப்பதை தவிா்க்க இயலாது எனக் கூறப்படும் தகவல் குறித்து தமிழக அரசு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழக அரசு, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 என விலை நிா்ணயம் செய்ய வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் மாா்ச் 3ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தீா்மானங்களை விளக்கி பேசினாா். மாநில கெளரவத் தலைவராக நன்னிலம் நடராஜன், மாநில துணைச் செயலராக குடவாசல் சாமிநாதன் நியமிக்கப்பட்டனா்.

மாநில அமைப்புச் செயலா் எஸ். ஸ்ரீதா், மண்டலத் தலைவா் துரை.பாஸ்கரன், தஞ்சை மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா்கள் பிரபாகரன் (தஞ்சை), சரவணன் (திருவாரூா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மன்னாா்குடி ஒன்றியச் செயலாளா் பி.கே. கோவிந்தராஜ் வரவேற்றாா். நிறைவாக, மாநில துணைச் செயலா் சாமிநாதன் நன்றி கூறினாா்.