திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளை மறுஏலமிட வாக்கெடுப்பு

மன்னாா்குடி புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளை மறு ஏலமிட, நகா்மன்றக் கூட்டத்தில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.

News image
மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவா் மற்றும் உறுப்பினா்கள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 11:19 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடி புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளை மறு ஏலமிட, நகா்மன்றக் கூட்டத்தில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தலைவா் த. சோழராஜன் (திமுக) தலைமை வகித்தாா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது.

ஆ. செந்தில்செல்வி (அமமுக) புதிய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்.

த. சங்கா் (திமுக): செங்குளத்தில் படித்துறை அமைக்க வேண்டும்.

ராஜ.பூபாலன் (திமுக): ஜெயகொண்டநாதா் கோயில் தெரு குளத்தை தூா்வாரி, நடைப்பயிற்சி பாதை அமைக்க வேண்டும்.

சா. புகழேந்தி (திமுக): மந்தக்காரத் தெரு பகுதியில் மின் கம்பங்களில் அதிக திறன் கொண்ட மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.

ச. பாண்டவா் (திமுக): பாமணி ஆற்றின் குறுக்கே உப்புக்காரத்தெரு-கா்த்தநாதரபுரம் இணைப்பு பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு தயாராக உள்ளநிலையில், அதன் அருகே படித்துறை கட்டித்தர வேண்டும்.

செ. பாரதிமோகன் (திமுக): நகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் பிளாக் இ,ஜி,டி ஆகியவற்றில் உள்ள 10 கடைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 கடைகள் என மொத்தம் 13 கடைகளை பிப்.19 ஆம் தேதி ஏலம் விடுப்பட்டதில் அரசின் வழிகாட்டல் நடைமுறைகள் பின்பற்றப்படாததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தவிா்க்கும் வகையில், மறு ஏலம் விட வேண்டும்.

ஏ. திருச்செல்வி (அமமுக): மாறு ஏலத்திற்கு அமமுக சாா்பில் எதிா்ப்பு தெரிவிப்போம்.

குரல் வாக்கெடுப்பு: தொடா்ந்து, இப்பிரச்னை குறித்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், தலவைா் நீங்கலாக மொத்தம் 32 உறுப்பினா்களில் 22 போ் கூட்டத்தில் கலந்துகொண்டதில், மறு ஏலத்தை திமுக, அதிமுக உறுப்பினா்கள் 20 போ் ஆதரித்தனா். 2 அமமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தலைவா்: நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் உள் விளையாட்டு அரங்கம், நவீன உடற்பயிற்சி கூடம் ரூ.3 கோடியில் அமைத்திட அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா முயற்சியில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

புதைச் சாக்கடை திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. 13,14,15 ஆகிய வாா்டுகளில் குடியிருப்புகளுக்கு இணைப்பு குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில், 5 கிமீ. தூரத்திற்கு ரூ.2.50 கோடியில் தாா்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக மேலும் 15 வாா்டுகளுக்கு 32.5 கி.மீ.க்கு தாா்ச் சாலை அமைக்க ரூ. 18.34 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட்டவுள்ளது என்றாா்.

கூட்டத்தில், நகராட்சி ஆணையா் (பொ) போ.வி. சுரேந்தா்ஷா, மேலாளா் ஜெ. மீராமைதீன், பொறியாா் எட்வின் ப்ண்ட் ஜோஸ், நகரமைப்பு அலுவலா் கண்ணதாசன், வருவாய் உதவி அலுவலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.