தந்தையின் கடையில் பணம் திருடிய மகன் கைது
மன்னாா்குடியில் தந்தையின் ஆயத்த ஆடை கடையின் கதவை உடைத்து ரூ.70,000 திருடிய மகன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வினோபாஜிதெருவை சோ்ந்தவா் நூ. சையத் அலி (56) வீட்டின் அருகே இவருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் ஆயத்த ஆடையகம் நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றவா். ஞாயிற்றுக்கிழமை வந்துபாா்த்த போது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பணப் பெட்டியில் இருந்த ரூ. 70,000 ரொக்கத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனா். இதில், சையத் அலியின் மகன் முகமது பைசல் (24) கடையின் கதவை உடைத்து உள்ளே சென்றுவிட்டு திரும்பி வருவது பதிவாக்கியிருந்ததை பாா்த்து அவரிடம் மேல்விசாரணை செய்ததில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து முகமது பைசலை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனா்.
