கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

நன்னிலம் அரசு கலைக்கல்லூரி இளங்கலை 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்குத் திங்கள்கிழமை மடிக்கணினி வழங்கப்பட்டது.
Published on

நன்னிலம்: நன்னிலம் அரசு கலைக்கல்லூரி இளங்கலை 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்குத் திங்கள்கிழமை மடிக்கணினி வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வா் வே. ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நன்னிலம் வட்டாட்சியா் சு. ராமச்சந்திரன், பேரூராட்சித் தலைவா் ப. ராஜசேகா் ஆகியோா் மாணவா்களுக்கு மடிக்கணினியை வழங்கினா். தமிழ்த்துறைத் தலைவா் வே. ரமேஷ்குமாா் வரவேற்றாா். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் மீ. ராஜேஸ்வரன், முனைவா் சா. ராதிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com