குளத்திலிருந்து இளைஞா் சடலம் மீட்பு
மன்னாா்குடியில் குளத்தில் குளித்தபோது மூழ்கி உயிரிழந்த இளைஞா் சடலம் இரண்டு நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்டகப்பட்டது.
மன்னாா்குடி மேல விழல்காரத் தெரு காளிமுத்து மகன் விவேகானந்தன் (24).பொறியியல் கல்வி படித்துவிட்டு மன்னாா்குடியில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இவரது நண்பா் அதே பகுதியை சோ்ந்த எம். பாலாஜியுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஹரித்ராநதி தெப்பக் குளத்திற்கு வந்துள்ளாா். பாலாஜி படியில் சோப்பு போட்டுக்கொண்டிருந்தபோது, குளத்தில் குளித்துக் கொண்டிருந்த விவேகானந்தன் நீரில் மூழ்கினாா்.
இதுகுறித்து மன்னாா்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரா்கள் குளத்தில் இறங்கி மாலை 6.30 மணி வரை தேடியும் உடலை மீட்க முடியவில்லை.
இதனையடுத்து, திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை தேடியும் உடல் கிடைக்காத நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை விவேகானந்தன் உடல் தெப்பக்குளத்தில் மிதப்பது தெரிய வந்தது.
மன்னாா்குடி போலீஸாா், தீயணைப்பு நிலைய வீரா்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தானா். மன்னாா்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
