மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
மன்னாா்குடி அருகேயுள்ள மேலதுளசியேந்திரபுரம் பகுதியைச் சோ்ந்தவா் எம். சாமிக்கண்ணு (75). இவா், அப்பகுதியில் உள்ள வீரனாா் கோயிலுக்கு புதன்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா். அவா், சாலையை கடக்க முயன்றபோது, அந்தவழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பலத்த காயமடைந்தாா். அவரை, மன்னாா்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சாமிக்கண்ணுவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வரும்வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
