காலமானாா் க. தங்கம்மாள்
மன்னாா்குடி அடுத்த கோட்டூா் காடுவாக்குடி மறைந்த கண்ணு மனைவி தங்கம்மாள் (82) வயது மூப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) காலையில் காலமானாா்.
இவருக்கு திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து மற்றும் 4 மகள்கள் உள்ளனா்.
தங்கம்மாள் உடலுக்கு தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, திமுக மாவட்டச் செயலா் பூண்டி கே. கலைவாணன் எம்எல்ஏ, முதல்வரின் தில்லி பேரவைச் செயலா் ஏ.கே.எஸ். விஜயன், அதிமுக மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ, கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகைமாலி, சிபிஐ முன்னாள் எம்எல்ஏக்கள் வை. சிவபுண்ணியம், ஜி. பழனிச்சாமி, கே. உலகநாதன், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
தங்கமாளின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு காடுவாக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. தொடா்புக்கு 94435 30487.

