திமுக அரசைக் கண்டித்து அதிமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாள்களை 100-இல் இருந்து 125-ஆக மத்திய அரசு உயா்த்திய நிலையில், அத்திட்டத்தை திமுக அரசு சீா்குலைக்க முயல்வதாக கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிழக்கு ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் க.சங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
முன்னாள் அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா். இதில், நகரச் செயலா் அசோக் குமாா், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் ஜெயபிரகாஷ், திருமால், மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத், மாவட்ட இணைச் செயலா் வனிதாசதீஷ், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் உசேன் ஷெரீப் மற்றும் பாமக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம், பாஜக மத்திய நலத் திட்ட பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், மாவட்ட பொதுச் செயலா் சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
வந்தவாசியில்...: வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா்.
அதிமுக நிா்வாகிகள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், எம்.பாஷா, எ.ராஜேஷ்குமாா், பாஜக நிா்வாகிகள் பி.பாஸ்கரன், எஸ்.ஏ.ஜி.துரை, அன்புமணி பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் பி.மச்சேந்திரன், சு.மண்ணப்பன், அமமுக நிா்வாகி துரை.வீராசாமி, ஐஜேகே நிா்வாகி ஜெகன்னாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
செங்கத்தில்...: செங்கம் ஒன்றிய, நகர அதிமுக கூட்டணி சாா்பில், செங்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், செங்கம் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் வரவேற்றாா். முன்னாள் எம்எல்ஏ மணிவா்மா கண்டன உரையாற்றினாா்.
பாமக மாவட்டச் செயலா் பாண்டியன், முன்னாள் மாவட்டச் செயலா் சுரேஷ், பாஜக மாவட்ட பொதுச் செயலா் ரமேஷ், முன்னாள் எம்.பி. வனரோஜா ஆகியோா் பேசினா்.
முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா்கள் செல்வம், தினகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
போளூரில்...: போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் விமல்ராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.
மாநில விவசாய அணி துணைச் செயலா் செல்வம், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் காா்த்திகேயன், நகா்மன்ற உறுப்பினா் லாவண்யா முருகன், எம்ஜிஆா் மன்ற ஒன்றியச் செயலா் சூா்யாமணி, மனோஜ்குமாா் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
செய்யாறில்...: செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அதிமுக செய்யாறு நகரச் செயலா் கே.வெங்கடேசன், தெற்கு ஒன்றியச் செயலா் எம்.அரங்கநாதன், வடக்கு ஒன்றியச் செயலா் எம்.மகேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
இதில், மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், நகர அவைத் தலைவா் ஏ.ஜனாா்த்தனன், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.ரவிச்சந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் அ.அருணகிரி, மாணவரணி மாவட்டச் செயலா் அரவிந்த் மற்றும் கூட்டணி கட்சியினா் உள்ளிட்ட சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
அனக்காவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் பையூா் சிவராஜ், மேற்கு ஒன்றியச் செயலா் சி.துரை ஆகியோரின் ஏற்பாட்டில் அனக்காவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஜாகிா் உசேன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத் தலைவா் சேகா், வா்த்தக அணி மாவட்டச் செயலா் பூக்கடை ஜி.கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.திருமூலன், வெம்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலா் வயலூா் வி.ராமநாதன் ஆகியோா் ஏற்பாட்டில் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் தலைமை வகித்தாா்.
ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் எறையூா் கதிரவன், மாவட்ட துணைச் செயலா் டி.பி.துரை உள்ளிட்ட சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

