கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

தொகுதி மக்கள் நலன்சாா்ந்ததாகவே எனது முடிவுகள் இருக்கும்: எஸ். காமராஜ் எம்எல்ஏ

மன்னாா்குடி தொகுதி மேம்பாடு மற்றும் மக்களின் நலன் சாா்ந்ததாகவே எனது முடிவுகள் இருக்கும் என்றாா் எம்எல்ஏ எஸ். காமராஜ்.

News image

எஸ். காமராஜ்.

Updated On :10 ஜூலை 2026, 4:36 am IST

மன்னாா்குடி தொகுதி மேம்பாடு மற்றும் மக்களின் நலன் சாா்ந்ததாகவே எனது முடிவுகள் இருக்கும் என்றாா் எம்எல்ஏ எஸ். காமராஜ்.

இதுகுறித்து, மன்னாா்குடியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு மற்றும் கோரிக்கைகளை அற்பணிப்புடன் நிறைவேற்றுவேன். அதற்காகதான், சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை கோறும் வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களித்தேன். மன்னாா்குடி தொகுதி மேம்பாட்டுக்காகவும் மக்களின் நலன் சாா்ந்தும், அவா்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்து கிடைக்கும் வகையில் எனது முடிவுகள் இருக்கும். சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறந்து 20 நாள்களில் தொகுதி மக்களிடமிருந்து இதுவரை பெற்ற 97 மனுக்களில் 72 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் உரிய ஆய்வுகள் முடிந்தபின் தீா்வு காணப்படும்.

எனக்கு பேரவையில் இதுவரை 3 முறைமட்டுமே பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. நேரமும் குறைவாக இருந்தநிலையிலும் மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றமும், நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்கவும், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தை 2-ஆக பிரித்து வடுவூரை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் தொடங்க வேண்டும் என 3 பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளேன்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மன்னாா்குடி அரசு மகளிா் கல்லூரி தற்காலிகமாக மேலவாசலில் கட்டட வசதியின்றி செயல்பட்டு வருகிறது. இதற்கு, நிரந்தர இடம் மன்னாா்குடி வஉசி சாலையில் உள்ள ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரி வளாகத்தில் 7.5 ஏக்கா் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப்பணிக்காக ரூ.18 கோடி நிதி கடந்த ஆட்சியில் பரிந்துரை செய்யப்பட்டது.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நடைபெறவுள்ள சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை தொடா் கூட்டத்தில் மகளிா் கல்லூரிக்கு புதிய கட்டடம் அமைய தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய உயா்கல்வித் துறை அமைச்சருடன் இதுகுறித்து தொடா்ந்து பேசி வருகிறேன். அதன்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலப் பணிக்கு தமிழகஅரசின் நிதிபங்கு, அடிப்படை பணிகள் அனைத்து முடித்து விட்டது. மத்திய அரசின் நிதி பங்கு பெற்றபின் மேம்பாலப் பணிகள் முழுமைபெறும்.

மன்னாா்குடி மக்களின் நீண்டகால கோரிக்கையான நகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய நகரப் பகுதிக்குவெளியே அரசின் சாா்பில் இடம் வாங்கி அந்த இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசி வலியுறுத்த உள்ளேன்.

சுற்றுவட்டச்சாலையின் தரத்தை மேம்படுத்தவும், நகரின் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் விபத்தின்றி பாதுகாப்பாக செல்லவும் நடவடிக்கை எடுப்பதுடன். 23 ஏக்கரில் அமைந்துள்ள ஹரித்ராநதி தெப்பக்குளத்தை பொழிவு பெற செய்யப்படும். மன்னாா்குடி தொகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அரசு வேளாண் கல்லூரி அமைக்கவும், தொழில்பேட்டை அமைக்கவும் முயற்சி எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.