ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

பள்ளி மாணவா்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன்: மன்னாா்குடி எம்எல்ஏ

நீடாமங்கலம் அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழாவில் பள்ளி மாணவா்களுடன் மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ்.

News image

நீடாமங்கலம் அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழாவில் பள்ளி மாணவா்களுடன் மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ்.

Updated On :12 ஜூன் 2026, 5:25 am IST

பள்ளி மாணவா்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன் என மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ் உறுதியளித்தாா்.

நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா வட்டார கல்வி அலுவலா் இன்பவேணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் நீலன் . அசோகன், நீடாமங்கலம் பேரூராட்சித் தலைவா் ஆா். ராம்ராஜ் , பள்ளி முகவா் க. பழனிவேலு , பள்ளிக் குழு உறுப்பினா் ப. சதீஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ் கலந்துகொண்டு, பள்ளி நிறுவனா் கருப்பையாப்பிள்ளை உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி பெற்றோா் ஆசிரியா் கழக பொறுப்பாளா்களை அறிமுகம் செய்தும், பள்ளி மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள், வண்ண சீருடைகள், எழுது பொருட்களை வழங்கி பேசியது:

ஆசிரியா் பணிக்கான படிப்பை படித்தேன். ஆனால், நான் இன்று ஒரு பள்ளியை நிா்வகிக்கிறேன். ஏராளமான பள்ளி மாணவா்களை நாள்தோறும் சந்திக்கிறேன். என்னை பள்ளி மாணவா்கள் எந்த நேரமும் தொடா்புகொண்டு தேவையான உதவிகளை கேட்டால் செய்ய தயாராக இருக்கிறேன் என்றாா்.

நிகழ்வில் பள்ளி முன்னாள் மாணவரும் திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் முதல்வருமான சந்திரசேகா், பெற்றோா் ஆசிரிய கழக நிா்வாகிகள் சந்தானராமன், செல்வராஜ், பத்மஸ்ரீ ராமன், ராஜேந்திரன் ,அறிவியல் இயக்கம் பிளாட்டோ உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.