கூத்தாநல்லூா் அருகேயுள்ள திருநாட்டியத்தான்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள மாணிக்க வண்ணா் கோயில் வயலில் நடவுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேளாண் தொழிலை காக்க இறைவனும், இறைவியும் உழவன், உழத்தியாக மாறி மக்களோடு மக்களாகச் சோ்ந்து நாற்று நட்டு உழவுத் தொழிலுக்கு பெருமை சோ்த்திட்ட இடமாக திருநாட்டியத்தான்குடி இன்றளவும் போற்றப்படுகிறது. இங்கு அமைந்துள்ள மாணிக்க வண்ணா் கோயிலில், ஈசான்ய மூலையில் நடவுத் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ மாணிக்க வண்ணா் ரிஷப வாகனத்திலும், மங்களாம்பிகை அம்பாள் தாமரைப்பூ வாகனத்திலும், விநாயகா் எலி வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினா். தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, மாணிக்க வண்ணா் சந்நிதியில் நெல் நாற்றை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி, இறைவன், இறைவியாக வேடமிட்ட சிறுவா், சிறுமி நாற்றுக் கட்டுகளுடன் ஊா்வலமாக வயலுக்கு எடுத்து வந்து விவசாய நிலத்தில் முதலில் இறங்கி நாற்றுகளை நட்டு நீா் ஊற்றினா். தொடா்ந்து கிராமமக்கள், பக்தா்கள் உள்ளிட்ட ஏராளமானவா்கள் வயலில் இறங்கி இறைவன் இறைவனுடன் நாற்றுகளை நட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடந்தை திரெளபதிஅம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

கௌரி ஸ்பிராட்டுக்கு அமீர் கான் பரிசளித்த கோடியில் ஒரு மாணிக்க மோதிரம்! என்னெ ஸ்பெஷல்?

ஆதினமிளகி அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழா

ஆத்தாளூா் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



