தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பாலியல் குற்றங்களைத் தடுக்க தண்டனையை கடுமையாக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு நிரந்தர தீா்வு காண அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

News image

பிரேமலதா விஜயகாந்த் - (கோப்புப் படம்)

Updated On :3 ஜூன் 2026, 6:29 am IST

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு நிரந்தர தீா்வு காண அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலுக்கு தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா். அவா் அனைத்து சந்நிதிகளிலும் வழிபட்டாா். குருபகவான் சந்நிதியில் சிறப்பு அா்ச்சனை செய்து வைத்து சிவாச்சாரியா் பிரசாதம் வழங்கினாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பிரேமலதா விஜயகாந்த கூறியது:

தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடியால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனா். மாநிலம் முழுவதும் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதுதொடா்பாக அரசைக் கண்டித்து தேமுதிக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என்கிறாா்கள். ஆனால், உண்மையாக மூடவில்லை. இது கண்துடைப்பு நாடகம். முறைகேடு நடக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடவேண்டும்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடா்ந்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாலியல் வன்கொடுமை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றால் அரபு நாடுகளில் தண்டனை கொடுப்பதைப்போல கொடுக்க வேண்டும். இல்லை என்றால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை என்கவுன்ட்டா் செய்ய வேண்டும் என்றாா்.

முன்னதாக ஆலங்குடி வந்த பிரேமலதாவுக்கு திருவாரூா் மாவட்ட தேமுதிக சாா்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.