எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயம்

News image

கொல்லுமாங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை வாய்க்காலில் கவிழ்ந்த பேருந்து.

Updated On :8 ஜூன் 2026, 1:20 am IST

கும்பகோணத்திலிருந்து காரைக்கால் சென்ற அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொல்லுமாங்குடி அருகே வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், 15 பயணிகள் காயமடைந்தனா்.

திருச்சியிலிருந்து, கும்பகோணம், கொல்லுமாங்குடி வழியாக காரைக்கால் செல்லும் அரசுப் பேருந்து 50 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறையைச் சோ்ந்த மாணிக்கவேல் பேருந்து ஓட்டுநா்.

திருவாரூா் மாவட்டம், கொல்லுமாங்குடி அருகே போழக்குடி என்ற கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட பேருந்து ஓட்டுநா் முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கற்கத்தி வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்தது.

இதில், 15 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் காயமடைந்தவா்களை மீட்டு, நான்கு பேரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கும், 11 பேரை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து பேரளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.