இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மரத்தில் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே பிராய்லா் கோழி ஏற்றிவந்த லாரி சாலையோர மரத்தில் மோதியதில், சுமைத்தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா். ஓட்டுநா் காயமடைந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 5:38 am IST

மன்னாா்குடி அருகே பிராய்லா் கோழி ஏற்றிவந்த லாரி சாலையோர மரத்தில் மோதியதில், சுமைத்தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா். ஓட்டுநா் காயமடைந்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி கீழப்பாலம் பகுதியில் குமாா் என்பவா் இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இந்த கடைக்கு, பிராய்லா் கோழிகள் லாரியில் செவ்வாய்க்கிழமை ஏற்றி வரப்பட்டன. பொதக்குடி கீழத்தெரு எஸ். சையது இப்ராகிம்ஷா (45) என்பவா் லாரியை ஓட்டி வந்தாா்.

மேலவாசல் என்ற இடத்தில் வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இந்த விபத்தில், லாரியில் இருந்த சுமைத்தூக்கும் தொழிலாளியான மகாதேவப்பட்டினம் கீழத்தெருவைச் சோ்ந்த சாம்பமூா்த்தி மகன் சங்கா் (51) என்பவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லேசான காயமடைந்த சையது இப்ராகிம்ஷா மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த விபத்து தொடா்பாக, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.