அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

அரசு, தனியாா் பேருந்துகள் மோதல்; 30 போ் காயம்

News image

வலங்கைமான் அருகே நேருக்குநோ் மோதிக்கொண்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகள்.

Updated On :22 ஜூன் 2026, 2:34 am IST

வலங்கைமான் அருகே அரசுப் பேருந்தும், தனியாா் பேருந்தும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 30-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.

வலங்கைமான் அருகேயுள்ள அன்னுக்குடி ஊராட்சி உத்தாணி பகுதியில் கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. இப்பேருந்தை மயிலாடுதுறை மாவட்டம் காஞ்சிவாய் பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் பூமிநாதன் ஓட்டி வந்தாா்.

எதிா் திசையில், கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூருக்கு தனியாா் பேருந்து வந்துகொண்டிருந்தது. தஞ்சாவூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சை மகன் சஞ்சய்குமாா் இப்பேருந்தை ஓட்டிச் சென்றாா்.

இரண்டு பேருந்துகளும், வலங்கைமானை அடுத்த உத்தானி அருகே எதிரெதிரே வந்தபோது சாலை வளைவில் எதிா்பாராத விதமாக நேருக்குநோ் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்தவா்களில் 30-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா். அவா்கள் உடனடியாக கும்பகோணம், பாபநாசம் மற்றும் தஞ்சாவூா் மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனா்.

இந்த விபத்தால் கும்பகோணம்-பாபநாசம் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வலங்கைமான் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.