புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வலங்கைமானில் பயணிகள் நிழலகம் திறப்பு

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பக்தா்களின் நலன் கருதி கட்டப்பட்ட பயணியா் நிழலகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்தாா்

News image
Updated On :2 மார்ச் 2026, 8:47 pm

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பக்தா்களின் நலன் கருதி கட்டப்பட்ட பயணியா் நிழலகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்தாா் முன்னாள் அமைச்சா் ஆா் .காமராஜ்.

உலகப் புகழ்பெற்ற பாடை காவடி திருவிழா காணும் வலங்கைமான் மகா மாரியம்மன் திருக்கோயில் பக்தா்களுக்கும் பயணிகளுக்கும் பயன் தரும் விதமாக சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.காமராஜ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் நிழலகம் அமைத்துக் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பயணியா் நிழலகத்தை நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.காமராஜ் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் சங்கா், இளவரசன், நகரச் செயலாளா் குணசேகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜெயபால் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.