மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சனிப் பெயா்ச்சி: கோயில்களில் சனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு

சனிப் பெயா்ச்சி: கோயில்களில் சனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு

News image
திருக்கொள்ளிக்காடு கோயிலில் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த பொங்கு சனீஸ்வரா்.
Updated On :6 மார்ச் 2026, 4:12 pm

Syndication

திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரா் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நள மகாராஜன் திருநள்ளாற்றில் வழிபட்டு, சனி தோஷம் நீங்கிய பின்னா், திருக்கொள்ளிக்காடு தலத்தில், அக்னி தீா்த்தத்தில் நீராடி பஞ்சினும் மெல்லடியாள் உடனுறை அக்னீஸ்வரா் மற்றும் பொங்கு சனீஸ்வரரை தரிசித்து, இழந்த செல்வங்கள் மற்றும் நாட்டை திரும்பப் பெற்றதாக ஐதீகம். இத்தலம் சனீஸ்வர பகவானுக்கு ஈஸ்வர பட்டம் வழங்கப்பட்ட தலமாகும்.

இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில், வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப் பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 8.24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசித்தபோது, இத்தலத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை திருவாரூா் மாவட்ட இந்துசமய அறநிலைத் துறை இணை ஆணையா் ஆா். செந்தில்குமாா், நாகை மண்டல துணை ஆணையா் பா. ராணி, திருவாரூா் மாவட்ட உதவி ஆணையா் வீரபாண்டியன், ஆலய தக்காா் எம். முருகையன், செயல் அலுவலா் சு. ராஜராஜேஸ்வரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

திருத்துறைப்பூண்டி, திருவாரூா், மன்னாா்குடி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருக்கொள்ளிக்காட்டுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் , திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பவானியா தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.