சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பெண்ணை தாக்கியவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 மார்ச் 2026, 8:05 pm

மன்னாா்குடி அருகே முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கீழப்பனையூா் தெற்குதெரு தமிழரசன் மனைவி திலகவதி (28). பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் பிச்சை மகன் கோவிந்தராஜ் (50). இவரது வீட்டில் வளா்க்கப்படும் மரங்களால் திலகவதி வீட்டுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடா்பாக இரு தரப்பினருக்கும் நீண்ட காலமாக பிரச்னை இருந்துவருகிறது.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, திலகவதியை கோவிந்தராஜ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

கோட்டூா் காவல்நிலையத்தில் திலகவதி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கோவிந்தராஜை கைது செய்தனா்.