பதற்றமான வாக்குச்சாவடிகள்
வலங்கைமான் வட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
வலங்கைமான் வட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தோ்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு, தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வலங்கைமான் வட்டத்தில், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய பதற்றமான வாக்குச்சாவடிகள் பகுதி கண்டறியப்பட்டுள்ளன.
அதன்படி, நெடுவாசல், கோவிந்தகுடி, விடையல் கருப்பூா், அவளிவநல்லூா், ஆலங்குடி, தென்குவளவேலி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் சட்டம்- ஒழுங்கு பாதிக்கக்கூடிய பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் உளவுப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...