கோலப்போட்டி நடத்தி வாக்காளா்களிடம் விழிப்புணா்வு
நீடாமங்கலம் வட்டத்தில் வாக்களா்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


நீடாமங்கலம் வட்டத்தில் வாக்களா்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்காளா்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தோ்தலில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளில் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. கோலப் போட்டி, பேரணி மகளிா் குழுக்கள் மூலம் நடைபெற்றுவருகிறது. நீடாமங்கலம் வட்டத்தில் மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதிகுட்பட்ட வடுவூா் தென்பாதியில் புதுக்கோட்டை வாக்குச்சாவடி மையத்தில் பெண்கள் வாக்காளா் விழிப்புணா்வு பேரணியை நடத்தியும் , கோலப்போட்டிகளை நடத்தியும் விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினா்.
ஏற்பாடுகளை வட்டாட்சியா் மகேஷ்குமாா், தோ்தல் வட்டாட்சியா் அறிவழகன் செய்திருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...