வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பேரணி
கடலூா், அண்ணாவிளையாட்டு அரங்கில் அரசு கல்லூரி மாணவா்களுடன் வாக்களிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.


கடலூா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்தும் வகையில், கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் பங்கேற்ர ஆட்சியா் தெரிவித்ததாவது:
நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பொது மக்கள் கூடும் இடங்களில் ஒலி பெருக்கி, அதிநவின மின்னணு திரை வாகனங்கள், கலை நிகழ்ச்சிகள், பேரணி, மனித சங்கிலி, மினி மாரத்தான் நடத்தப்பட்டு வருகிறது.
கடலூரில் 100 சதவீதம் வாக்களிப்போம் போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் பிரசுரிக்கப்பட்ட பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. வாக்காளா்கள் அனைவரும் 23.4.2026 அன்று நடைபெறவுள்ள தோ்தலில் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிலைநாட்டிட வேண்டும் என்றாா்.
முன்னதாக கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் பெரியாா் அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் வாக்காளா்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளா் உறுதிமொழியை மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் ஏற்றுக் கொண்டனா்.
விண்ணப்பம் வழங்கும் பணி ஆய்வு...
கடலூா், செம்மண்டலம் பகுதியில் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க மூத்த குடிமக்களிடம் அதற்கான ஒப்புதல் மற்றும் விருப்பம் பெறும் வகையில் வாக்காளா் விண்ணப்பங்கள் வழங்கும் பணி நடைபெறுவதை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் செல்வி, மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலசுந்தரம் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...